News October 23, 2024

நெல்லை மாவட்டத்தில் வறண்டு போன 800 குளங்கள்

image

நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (அக்.22) லேசான சாரல் மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையாத காரணத்தினால் மாவட்டத்தில் உள்ள 1200 குளங்களில் சுமார் 800 குளங்கள் வறண்ட நிலையில் காட்சியளிக்கிறது. மீதமுள்ள குளங்களில் பெயரளவுக்கு தண்ணீர் இருக்கிறது. களக்காடு வட்டம் அதன் சுற்றுவட்டார விவசாயிகளுக்கு நீர் ஆதாரமாக விளங்கும் திருக்குறுங்குடி பெரியகுளம் வறண்டு காணப்படுகிறது.

Similar News

News October 23, 2025

மாவட்டக் கலைப் போட்டி தேதிகள் அறிவிப்பு

image

நெல்லை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் வட்டார அளவில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் வருகிற 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். காலை மற்றும் பிற்பகல் 2 பிரிவாக போட்டிகள் நடைபெறும்.

News October 23, 2025

நெல்லை: டூவிலர் மோதி தொழிலாளி உயிரிழப்பு

image

பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். தனது மனைவியுடன் புலவன் குடியிருப்பில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அவர் தனது நண்பருடன் இடையன்குளம் பகுதியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பத்தமடை வடிவேல் என்பவர் ஒட்டி வந்த பைக் மோதியதில் சிவகுமார் படுகாயம் அடைந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து களக்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 23, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் பொழிந்த மழையளவு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் பொலிந்த மழை அளவு அம்பாசமுத்திரம்- சேரன்மகாதேவி 7.40, மணிமுத்தாறு 0.80, நாங்குநேரி 5.00, பாளையங்கோட்டை- ராதாபுரம் 7.00, பாபநாசம் 4.00, திருநெல்வேலி 2.00, சேர்வலாறு அணை1.00, கனடியன் அணைக்கட்டு – களக்காடு 2.60, கொடுமுடியாறு அணை 9.00, மூலக்கரைப்பட்டி 1.00, நம்பியார் அணை 3.00, மாஞ்சோலை 4.00, காக்காச்சி 46.00, நாள் மூக்கு 52.00, உத்து 66.00 ஆகிய அளவுகளில் பதிவாகியுள்ளது.

error: Content is protected !!