News April 25, 2025
நெல்லை மாவட்டத்தில் இயல்பை விட 158 % மழை

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சுகுமார் கூறியதாவது:- நெல்லை மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 106.90 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது மாவட்டத்தின் வழக்கமான மழை அளவான 41.30 மில்லி மீட்டரை விட 158.83% அதிகம் ஆகும். நடப்பு ஏப்ரல் மாதத்தில் 23ஆம் தேதி வரை 63.10 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது 5.51% கூடுதல்.
Similar News
News April 26, 2025
நெல்லை: மிளகு அரைத்தால் மழை வரும் கோயில்

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் மிளகு பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றின் தண்ணீரை கொண்டு செல்ல முக்கிய கால்வாய்களில் ஒன்று கன்னடியன் கால்வாய். பருவமழை இல்லாமல் கன்னடியன் கால்வாய் வறண்டு போகும் போது, பக்தர்கள் மிளகு அரைத்து பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து, மழை பெய்ய வேண்டி கால்வாயில் அபிஷேக நீரை விழ வைப்பார்கள். அவ்வாறு செய்தால் மழை வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE!!
News April 26, 2025
அப்பு விளை ஊராட்சி ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் அப்புவிளை ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் 2023 அக்டோபரில் உயிரிழந்ததை அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் உடனடியாக தெரிவிக்காமல் கால தாமதமாக 2025 மார்ச்சில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஊராட்சி செயலர் சுமிலா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
News April 26, 2025
நெல்லை: பள்ளி சத்துணவு மையங்களில் வேலை

திருநெல்வேலி மாவட்டத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் இயங்கி வரும் பள்ளி சத்துணவு மையங்களில் 119 சமையல் உதவியாளர்(பெண்) காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதில் ரூ.3,000 – ரூ.9,000 ஊதியம் வழங்கப்படும் நிலையில் இதற்கு விண்ணப்பிக்க இன்றே(ஏப்.26) இன்றே கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <