News April 17, 2025

நெல்லை மாவட்டத்தின் முக்கிய உதவி எண்கள்

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0462–2501035, காவல் -100, விபத்து -108 ,தீ தடுப்பு – 101, குழந்தைகள் பாதுகாப்பு -1098, பாலின துன்புறுத்தல் தடுப்பு – 1091, குழந்தைத் தொழிலாளர் -55214, 1800 4252 650, இரயில்வே உதவி – 1512, கடலோர காவல் உதவி – 1093 ஆகிய உதவி எண்களில் அழைக்கலாம்.

Similar News

News December 6, 2025

நெல்லை: விவசாயி விஷம் குடித்து தற்கொலை

image

சீவலப்பேரி பொட்டல் பச்சேரி பகுதியை சேர்ந்த அந்தோனி மகன் மிக்கேல் (47). விவசாயியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இவரை மீட்ட உறவினர்கள் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சீவலப்பேரி போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

News December 6, 2025

நெல்லை: கரண்ட் கட்? இனி Whatsapp மூலம் எளிய தீர்வு..!

image

நெல்லை மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News December 6, 2025

நெல்லை: வழுக்கி விழுந்த இளைஞர் பரிதாப பலி!

image

கங்கைகொண்டான் ஆலடிபட்டி பகுதியை சேர்ந்த முருகையா என்பவருடைய மகன் கருப்பசாமி (35). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் குளித்துவிட்டு வந்தபோது எதிர்பாரதவிதமாக டைல்சில் கால் வழுக்கி கீழே விழுந்தார். இதில் தலையின் பின்பகுதியில் பலத்த காயமடைந்து பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

error: Content is protected !!