News April 3, 2025
நெல்லை மண்டலத்தில் ரூ.9.10 கோடி வரி பாக்கி – பகீர் தகவல்

திருநெல்வேலி மாநகராட்சி திருநெல்வேலி மண்டலத்தில் மட்டும் சொத்து வரி எவ்வளவு பாக்கி இருக்கிறது என்ற தகவல் கேட்டு பாளையங்கோட்டையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்திருந்தார். அவருக்கு மாநகராட்சி கொடுத்த தகவலில், திருநெல்வேலி மண்டலத்தில் மட்டும் ரூ.9.10 கோடி சொத்து வரி பாக்கி இருப்பதாக தகவல் இன்று வெளியாகியுள்ளது.
Similar News
News January 8, 2026
நெல்லை: பள்ளி மாணவன் வெட்டிக்கொலை

நெல்லை பணகுடியில் சில தினங்களுக்கு முன் லெட்சுமணன் (15) என்ற பள்ளி மாணவனை சபரி ராஜன் (23) என்ற இளைஞர் கஞ்சா போதையில் அரிவாளால் வெட்டினார். இதில் படுகாயமடைந்த மாணவன் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சபரி ராஜனை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்நிலையில், மாணவன் லெட்சுமணன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் கொலை முயற்சி வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
News January 8, 2026
நெல்லை: EXAM இல்லை.. போஸ்ட் ஆபீசில் வேலை ரெடி!

திருநெல்வேலி மக்களே அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். ஜன.15க்கு பிறகு <
News January 8, 2026
நெல்லை: +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

சேரன்மாதேவியை சேர்ந்த மீனாட்சிசுந்தரம் என்பவரது மகள் ஸ்ரீவரகோமதி (17). இவர் சேரன்மாதேவியில் உள்ள அரசு பள்ளியில் 12வது படித்து வந்தார். மாணவி பள்ளிக்கு லீவ் போட்டு பெற்றோரை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர்கள் மாணவியை பள்ளிக்கு செல்ல கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி நேற்று திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேரன்மாதேவி போலீசார் விசாரணை.


