News May 17, 2024
நெல்லை: பாட நோட்டுகள் விலை 10-20% வரை சரிவு

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பள்ளி திறக்கும்போது பாட நோட்டு புத்தகங்கள் அதிகபட்சம் 10 சதவீதம் வரை உயரும். ஆனால் நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு 10% வரை பாடநோட்டுகள் விலை சரிந்துள்ளது. கடந்த ஆண்டு 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட லாங் சைஸ் நோட்டு இப்போது 25 ரூபாயாக குறைந்துள்ளது. டிராயிங் நோட்டு, கணக்கு நோட்டு உள்ளிட்டவற்றின் விலை 20 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 5, 2025
நெல்லை: இனி Whatsapp மூலம் ஆதார் கார்டு..!

நெல்லை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 5, 2025
நெல்லை: மாணவி தற்கொலை முயற்சி – ஆசிரியை மீது வழக்கு

வி கே புரம் அருகே வடக்கு அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்த 11 வயது, 5ஆம் வகுப்பு மாணவி வீட்டில் சேட்டை செய்வதாக தாய் புகார் அளித்ததால், பள்ளி ஆசிரியை வேளாங்கண்ணி (37) பிரம்பால் அடித்து கண்டித்தார். மனமுடைந்த மாணவி வீட்டில் அதிக மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மீட்கப்பட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ஆசிரியை மீதுவழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 5, 2025
நெல்லை: 10th போது அரசு பள்ளி வேலை., மீண்டும் வாய்ப்பு APPLY

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 14967 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. விண்ணப்ப கடைசி தேதி டிச. 4க்குள் முடிவடைந்த நிலையில், தற்போது கடைசி தேதி டிச. 11 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 18 – 45 வயதுக்குட்பட்ட 10th, 12th, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கு <


