News August 17, 2024
நெல்லை – தூத்துக்குடி ரயில் சேவை ரத்து

பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் 4 நாட்களில் பாலருவி பாசஞ்சர் இரயில் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே நிரந்தரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே நிரந்தரமாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும்.
Similar News
News December 17, 2025
மதுரை: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா?

மதுரை மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் எதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATE ஆக வாய்ப்புள்ளது. <
News December 17, 2025
மதுரையில் எலி மருந்து குடித்து தற்கொலை

மதுரை ஆண்டார்கொட்டாரத்தைச் சேர்ந்தவர் ராமக்கோடி (62). இவர் தொடர்ந்து மது அருந்தி வந்ததால் வீட்டார் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர், நேற்று எலி மருந்தை அருந்தியுள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக G.H-ல் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமக்கொடி உயிரிழந்தார். இது குறித்து சிலைமான் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
News December 17, 2025
மதுரையில் சிக்கிய மாடு திருடும் கும்பல்!

மதுரை வண்டியூர் கோமதிபுரம் உள்ளிட்ட பகுதியில் மாடுகள் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்த வண்ணம் இருந்தது. இந்த கும்பலை மாட்டின் உரிமையாளரும், போலீசாரும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வண்டியூரில் ஒரு வீட்டின் முன் கட்டப்பட்டிருந்த கறவை மாடுகளை, 4 சிறுவர்கள் உட்பட 5 பேர் வாகனத்தில் ஏற்றி கடத்த முயன்றுள்ளனர். அப்போது அப்பகுதியினர் அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


