News April 29, 2025
நெல்லை: தலை நசுங்கி வாலிபர் பலி

திசையன்விளையை சேர்ந்த செந்தில் முருகனின் மகன் சந்தோஷ்(14). பரப்பாடியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். நேற்றிரவு சந்தோஷ் பைக்கில் பரப்பாடியில் இருந்து நாங்குநேரி சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பைக்கில் மோதி கீழே விழுந்தார். அப்போது பின்னால் வந்த பேருந்தின் சக்கரமானது சந்தோஷ் தலை மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். விஜயநாராயணம் போலீசார் விசாரணை.
Similar News
News December 8, 2025
நெல்லை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News December 8, 2025
நெல்லை: குளத்தில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

களக்காடு அருகே கக்கன் நகரைச் சேர்ந்த வேல்மயில் (67) நேற்று பகலில் பொருள் வாங்க களக்காடு சென்றார். வியாசராசபுரம் அருகே குடிநீர் தாங்கி குளக்கரையில் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தார். களக்காடு போலீஸார்சம்பா இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News December 8, 2025
நெல்லை: ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

பாளை பொட்டல் கரையிருப்பு பகுதியில் நேற்று அடுத்தடுத்து ரூ.1 கோடி மதிப்பிலான 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் தாழையூத்து நிதீஷ் குமார், கங்கைகொண்டான் சுரேஷ் குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் சுரேஷ்குமாரின் தந்தை கலைஞர் என்பவரை போலீசார் தேடிய நிலையில் அவர் விஷம் அருந்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். போலி கேரள பதிவு கொண்ட கார் கைபற்றப்பட்டது.


