News March 24, 2025
நெல்லை: தனிப்படை போலீசார் தீவிர வேட்டை

டவுன் தொட்டி பாலத்தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி. ஓய்வு பெற்ற சப்இன்ஸ்பெக்டர் ஆன இவர் இடப்பிரச்னை காரணமாக கடந்த 18-ஆம் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் கிருஷ்ணமூர்த்தி, பீர்முகமது, அக்பர் ஷா ஆகிய 3 பேர் கைதாகினர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி நூர் நிஷாவை 3 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
நெல்லை மாநகராட்சி அதிரடி – ரூ.2 ஆயிரம் அபராதம்!

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2000 அபராதம் விதிக்க மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாநகர நல அலுவலர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மாநகரம் முழுவதும் ஆய்வு செய்து மாடுகளை பிடித்து அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளனர்.

நெல்லை: மண் அள்ளியதால் தகராறு; 6 பேருக்கு வெட்டு

விக்கிரமசிங்கபுரம் அருகே செட்டிமேடு பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவன் வீட்டின் அருகில் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் ரோடு போடுவதற்காக மண் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த மண்ணை பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வின் அள்ளிச்சென்றார். இதனை மாரிமுத்துவின் மாமியார் ஆவுளம்மாள் கண்டித்தார். இதனால் நேற்று ஏற்பட்ட தகராறில் செல்வின் மண்வெட்டியால் 6 பேரை வெட்டினார். விகேபுரம் போலீசார் விசாரணை.