News August 8, 2024

நெல்லை – செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

image

செங்கோட்டை ரயில் நிலையத்தில் வரும் 13 ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நெல்லை – செங்கோட்டை பயணிகள் ரயில் தென்காசி வரை மட்டுமே செல்லும். செங்கோட்டையில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் தென்காசியில் இருந்து கிளம்பி நெல்லை செல்லும் மற்ற ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் நேற்று தெரிவித்துள்ளது.

Similar News

News December 25, 2025

தென்காசி: வனவிலங்கு வேட்டைக்கு முயற்சி; இருவர் கைது

image

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே மருக்காலன்குளம் மற்றும் மேசியாபுரம் பகுதிகளைச் சேர்ந்த காசிப்பாண்டியன் மற்றும் முருகராஜ் ஆகியோர், வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் தங்கள் தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆலங்குளம் வனத் துறையினர் நடத்திய சோதனையில் சட்டவிரோத மின்வேலி கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இருவரையும் கைது செய்யப்பட்டனர்.

News December 25, 2025

தென்காசி: நீண்ட கால துன்பம் நீக்கும் ஆலயம்

image

தென்காசி, கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் காட்சி தருகிறார். இங்குள்ள நரசிம்ம தீர்த்தத்தில் நீராடினால் சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். நரசிம்மருக்கு பிரியமான பானகம் படைத்து வணங்கினால் அவரின் முழு அருளும் கிடைக்கும். நரசிம்மரை தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். நீண்ட கால துன்பங்கள் நீங்கும். SHARE

News December 24, 2025

தென்காசி: மரத்தில் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை

image

தென்காசி மாவட்டம், புளியங்குடி, சிந்தாமணி அம்பேத்கர் தெருவை சேர்ந்த முனீஸ்வரன் மகன் செல்லப்பா (45) என்பவர், இன்று புளியங்குடி – ராஜபாளையம் மெயின் ரோட்டில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலறிந்த புளியங்குடி காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் உடலை உடற்கூறு ஆய்வுக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!