News October 17, 2025

நெல்லை சிறப்பு ரயில் – சுற்றுலா யாத்திரை அறிவிப்பு

image

இந்திய ரயில்வே சுற்றுலா கழக ஐ ஆர் டி எஸ் குழு பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், நெல்லையிலிருந்து ஜோதிர்லிங்கம் மற்றும் சீரடி யாத்திரை சிறப்பு சுற்றுலா ரயில் நவம்பர் 9ஆம் தேதி புறப்பட்டு 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாசிக், சீரடி, ஷனி சிங்நாபூர், பண்டரிபுரம், மந்திராலயம் போன்ற பகுதிகளுக்கு சென்று வரும் என்றார். *ஷேர் பண்ணுங்க

Similar News

News December 8, 2025

நெல்லை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News December 8, 2025

நெல்லை: குளத்தில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு

image

களக்காடு அருகே கக்கன் நகரைச் சேர்ந்த வேல்மயில் (67) நேற்று பகலில் பொருள் வாங்க களக்காடு சென்றார். வியாசராசபுரம் அருகே குடிநீர் தாங்கி குளக்கரையில் நிலைதடுமாறி விழுந்து உயிரிழந்தார். களக்காடு போலீஸார்சம்பா இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News December 8, 2025

நெல்லை: ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்

image

பாளை பொட்டல் கரையிருப்பு பகுதியில் நேற்று அடுத்தடுத்து ரூ.1 கோடி மதிப்பிலான 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் தாழையூத்து நிதீஷ் குமார், கங்கைகொண்டான் சுரேஷ் குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் சுரேஷ்குமாரின் தந்தை கலைஞர் என்பவரை போலீசார் தேடிய நிலையில் அவர் விஷம் அருந்தி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். போலி கேரள பதிவு கொண்ட கார் கைபற்றப்பட்டது.

error: Content is protected !!