News November 2, 2024
நெல்லை சரகத்தில் 275 வழக்குகள் பதிவு
நெல்லை காவல் சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 142 வழக்குகளும், பொதுமக்களுக்கு இடையூறாக விதிகளை மீறி நடந்து கொண்டதாக 133 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக நெல்லை டிஐஜி மூர்த்தி நேற்று (நவ.1) தெரிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2024
நெல்லை: மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிப்பு
நெல்லை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குறிப்பாக இன்று(நவ.20) பள்ளிகளுக்கு நெல்லையில் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மழைக்கால அவசர உதவி எண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
News November 20, 2024
ஏழு மணி நிலவரப்படி 539 மில்லிமீட்டர் மழை
நெல்லை மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் கனமழை காணப்பட்டது. அம்பையில் 38 மில்லி மீட்டர், சேரன்மகாதேவியில் 47.20 மில்லி மீட்டர், நாங்குநேரியில் 58 மில்லி மீட்டர், களக்காட்டில் 57.20 மில்லி மீட்டர், ராதாபுரத்தில் 33 மில்லி மீட்டர் ஒட்டுமொத்தமாக இன்று காலை 7 மணி நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் 539. 20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 20, 2024
நெல்லையில் இன்று நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் விபரம்
இன்று காலை 10 மணிக்கு நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. காலை 9:15 மணிக்கு பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு சிறப்பு ஆளுமை திறன் பயிற்சி கருத்தரங்கு நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு சட்டமன்ற பேரவை பொதுப் கணக்கு குழு ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறது.