News April 27, 2025
நெல்லை கோர விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தளபதி சமுத்திரம் நான்கு வழிச்சாலையில் இன்று மாலை இரண்டு கார்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News December 2, 2025
நெல்லை: உச்சம் தொட்ட முருங்கைகாய் விலை

தொடர் மழையின் காரணமாக நெல்லையில் காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது. மழையின் காரணமாகவும் முருங்கைக்காயின் வரத்து குறைவு காரணமாகவும் முருங்கைக்காயின் விலை உச்சம் அடைந்துள்ளது. நெல்லை உழவர் சந்தைகளில் கிலோ 310 ரூபாய்க்கு விற்பனையாகிறது வெளிச்சந்தைகளில் 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் முருங்கைக்காயின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றன.
News December 2, 2025
நெல்லை: அரசு பஸ் மோதி பெண் உயிரிழப்பு

நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 47). இவரது மனைவி சந்திரா (42). இவர்கள் மீனாட்சிபுரத்தில் டிபன் சென்டர் நடத்தி வருகின்றனர். நேற்று பிற்பகல் சமாதானபுரம் பகுதியில் மொபட்டில் சென்ற போது பின்னால் வந்த அரசு பஸ் மோதியது. இதில் சந்திரா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். சுப்பையா லேசான காயத்துடன் தப்பினார். விபத்துக்குறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.
News December 2, 2025
நெல்லை: ஆதார் குறித்து மத்திய அரசு முக்கிய அப்டேட்!

நெல்லை மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிக்கிறீங்களா?? வீட்டில் இருந்தே மாத்திக்கும் வழியை மத்திய அரசு வெளியிட்டு இருக்கு. இந்த <


