News April 5, 2025

நெல்லை: கொலை வழக்கில் 8 பேர் விடுதலை 

image

மேலப்பாளையத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு சொத்து பிரச்சனை தொடர்பாக காதர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு முதலாவது கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 8 பேரையும் நீதிபதி பத்மநாதன் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

Similar News

News April 9, 2025

அணைகளின் இன்றைய நீர் இருப்பு நிலவரம்

image

இன்று (ஏப்.9) காலை 7 மணி நிலவரப்படி பாபநாசம் அணை நீர் இருப்பு 88 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 91 கன அடி நீர் வருகிறது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 103.48 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 285 அடியாக உள்ளது. வடக்கு பச்சையாறு நீர் இருப்பு 9 அடியாக உள்ளது. நம்பியார் நீர் இருப்பு 13 அடியாகவும் கொடுமுடியாறு நீர் இருப்பு 14 அடியாகவும் உள்ளது.

News April 9, 2025

தமிழ் பெயர் பலகை வைக்க கால அவகாசம்

image

நெல்லையில் கடைகள்,வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழில் நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்பதை கண்காணிக்க நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமாரை தலைவராகக் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் மே 2ஆவது வாரத்திற்குள் 100% பெயர் பலகை வைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

நெல்லையில் ரூ.50,000 ஊதியத்தில் வேலை

image

திருநெல்வேலியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் 25 உற்பத்தியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் 10-ம் வகுப்பிற்கு கீழ் படித்த 3 வருடம் அனுபவம் உள்ள 18 – 50 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25,000 – 50,000 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.

error: Content is protected !!