News March 29, 2024

நெல்லை: குடும்பத் தகராறில் இளம்பெண் தற்கொலை

image

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள தெற்கு வீரவநல்லூரை சேர்ந்தவர் ஜெபக்குமார். இவரது மனைவி முருக ஜோதி(29). குடும்ப பிரச்னை காரணமாக முருக ஜோதி விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று(மார்ச் 28) வீட்டில் தூக்கிட்டு தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News October 17, 2025

கல்வி உதவித்தொகை தருவதாக பேசி மோசடி

image

திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் பள்ளிப் பயிலும் அல்லது கல்லூரி பயிலும் மாணவர்களை குறி வைத்து, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள் மாணவர்களின் தர தரவுகளை சரியாக சொல்லி ஆன்லைன் மூலமாக பணம் பெறுவதாக வங்கி கணக்கில் பின் எண்களை கேட்டு மோசடி செய்வதாகவும் மாணவர்களும் பெற்றோரும் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.

News October 17, 2025

நெல்லையில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி

image

திருநெல்வேலி மாவட்டம், சமுகரெங்கபுரத்தில் பந்தல் அமைக்கும் பணியில் வள்ளியூரை சேர்ந்த பந்தல் உரிமையாளர் சுரேஷ் மற்றும் அவரது மகன் ஸ்டீபன் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் இருவரும் மீதும் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக பலியாகினர். இது குறித்து ராதாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 17, 2025

திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட் சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கல்வித்துறை அலுவலகத்தில் இருந்து கல்வி உதவித் தொகை தருவதாகக் கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் எனவும், மோசடியில் ஈடுபடுவோர் மீது புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!