News April 22, 2025
நெல்லை – காச்சிகுடா ரயில் சேவை நீட்டிப்பு

கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு நெல்லை வழியாக இயக்கப்படும் காச்சிகுடா – நாகர்கோவில் சிறப்பு ரயில் வண்டி எண் (07435/ 36) ஜூன் மாதம் முதல் வாரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ரயில் சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, திருவண்ணாமலை வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
நெல்லை: இந்தியன் ஆயிலில் 2757 காலியிடங்கள்., NO EXAM

நெல்லை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 Apprentices பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 24 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 18க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News December 10, 2025
நெல்லையில் இளைஞர் மீது பாய்ந்த குண்டாஸ்

சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்கில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியை சேர்ந்த சேர்ந்த குத்தாலம் என்பவரின் மகன் பூர்ண ஆனந்த்(31) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறி நேற்று போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் பாளை சிறையில் அடைத்தனர்.
News December 10, 2025
நெல்லை மக்கள் கவனத்திற்கு..!

மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (டிச 10) நெல்லை மாநகராட்சியின் 55 வார்டுகளிலும் மாமன்ற உறுப்பினர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடைபெறும் என ஆணையர் மோணிகா ரானா நேற்று அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் அடிப்படை தேவைகள் குறித்தும் வார்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் மாமன்ற உறுப்பினர்களிடம் முறையிடலாம் என்றும் ஆணையர் தெரிவித்துள்ளார்.


