News December 5, 2024

நெல்லை எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்

image

ரயில்களில் முன்பதிவற்ற பெட்டிகளில் காணப்படும் அதிக கூட்டத்தை கணக்கில் கொண்டு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஏற்கனவே 3 பொது பெட்டியுடன் இயங்கி வரும் நெல்லை & பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதலாக ஒரு முன்பதிவற்ற பொதுப்பெட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் இணைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மொத்தம் 22 பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 4, 2025

தாமிரபரணி ஆற்றில் பல கோடி மதிப்பிலான சிலை

image

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே உள்ள சக்தி குளம் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றில் நேற்று அப்பகுதியை சேர்ந்த சிலர் குளித்த போது ஆற்றில் 3 ஐம்பொன் சிலைகள் கிடந்ததை பார்த்து அவற்றை ஆற்றில் இருந்து வெளியே எடுத்து உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு கொடுத்த தகவல் கொடுத்தனர். அவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் இதுக்குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 4, 2025

நெல்லை: 12th PASS – ஆ? ரூ.71,900 சம்பளத்தில் வேலை ரெடி!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே<> கிளிக்<<>> செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

நெல்லையில் 2 பேர் மீது குண்டர்

image

சிங்கிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த வானுமாமலையை கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகளில் களக்காடு போலீசாரும், வீரநல்லூர் கிளாக்குளம் மாதா கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து என்ற கட்ட இசக்கியை (42) கொலை முயற்சி மிரட்டல் வழக்குகளிலும் வீரவநல்லூர் போலீசாரும் கைது செய்தனர். போலீசார் வானுமாமாலை, இசக்கிமுத்துவை ஆட்சியரின் உத்தரவின் படி நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!