News April 28, 2025
நெல்லை: உயிரழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

நெல்லை மாவட்டம் தளபதிசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நடந்த கார் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஏப்.27) மாலை கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு தலா 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஏப்.28) அறிவித்துள்ளார்.
Similar News
News July 7, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஜூலை 06] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் ரகுபதிராஜா இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News July 6, 2025
நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்துக்கு மெகா பிளான்

நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 8ம் தேதி சுமார் 1000க்கும் மேற்பட்ட போலீசார் மாநகர கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேரோட்ட பாதுகாப்பு பணிக்காக பிரத்யேகமாக 3 ட்ரோன்கள், CCTV உட்பட 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும் 10 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் இன்று அறிவித்துள்ளது. *ஷேர்
News July 6, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஜூலை 06] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் தர்ஷிஐஆ இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.