News April 28, 2025
நெல்லை: உயிரழந்தவர்களுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

நெல்லை மாவட்டம் தளபதிசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நடந்த கார் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஏப்.27) மாலை கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு தலா 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஏப்.28) அறிவித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
மாநகரின் இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம் அறிவிப்பு

மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவுபடி திருநெல்வேலி மாநகரில் இன்று இரவு முதல் நாளை நவம்பர் 27 காலை 6 மணி வரை காவல் பணியில் உள்ள முக்கிய உயர் அதிகாரிகள் குறித்த விவரத்தை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ளது அவர்களது கைபேசி எண் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது இரவு அவசர காவல் உதவி தேவைப்படும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
News November 27, 2025
இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.26) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர், விவரம், காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News November 26, 2025
நெல்லை பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி நாளை துவக்கம்

திருநெல்வேலி மாவட்ட கால்பந்துக் கழகம், பெல்பின்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நாளை (நவ.27) தொடங்குகின்றன. இப்போட்டி, நவ.30ம் தேதி வரை தினமும் காலை 6.30 மணிக்கும், மாலை 3 மணிக்கும் நடை பெற உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 15 அணிகள் பங்கேற்கின்றன. நிறைவு நாளில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுகள் வழங்கப்படும்.


