News April 21, 2025

நெல்லை: உயர் கல்வி ஆலோசனை சிறப்பு எண்கள் அறிமுகம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டவும், ஆலோசனை வழங்கவும் 95003 24417, 95005 24417 ஆகிய சிறப்பு எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த எண்களை தொடர்பு கொண்டு கல்வி கடன் மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைகளை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட  கலெக்டர் சுகுமார் இன்று தெரிவித்தார். *மாணவர்கள் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க*

Similar News

News December 12, 2025

நெல்லை: திருநங்கைகள் கோஷ்டி மோதல்

image

பாளை வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று இரவு திருநங்கைகள் இரு குழுக்களாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாலை, இரவு நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தகவலறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

News December 12, 2025

நெல்லை: உங்க நிலத்தை காணவில்லையா? இத பண்ணுங்க..

image

திருநெல்வேலி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க அப்பா, தாத்தா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனால் நிலம் எங்கே இருக்குன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்க யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <>இங்கே க்ளிக்<<>> செய்து LOGIN செய்து மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க.

News December 12, 2025

நெல்லை: SIR-ல் முறைகேடு? அலுவலருக்கு பறந்த நோட்டீஸ்!

image

சேரன்மாதேவி மாஞ்சோலை ஊத்து பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் முறைகேடு எழுந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது. அங்கு வாக்குச்சாவடி 102-ல் 63 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அங்கு ஒருவர் கூட வசிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக 5 வாக்குச்சாவடி நிலைய அலுவலருக்கு விளக்கம் அளிக்க சேரன்மாதேவி சார் ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

error: Content is protected !!