News April 21, 2025

நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

image

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.20] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

Similar News

News October 31, 2025

நெல்லை: இன்றைக்குள் இதை செய்தால் ரூ.5 ஆயிரம் தள்ளுபடி

image

திருநெல்வேலி மாநகராட்சிக்கு 2025 – 26 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் அரையாண்டுக்குரிய சொத்து வரியை இன்று அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தும் வரி விதிப்புதாரர்களுக்கு சொத்து வரி தொகையில் 5 சதவிகிதம் அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். எனவே இன்றைக்குள் முடியும் இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

News October 31, 2025

நெல்லை: 12th முடித்தால் கிராமப்புற வங்கியில் வேலை உறுதி!

image

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். பயனுள்ள தகவலை SHARE IT.

News October 31, 2025

நெல்லையில் முட்டை விலை ரூ.6.50

image

நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் மொத்த முட்டை விற்பனை கடைகளில் முட்டை விலை நீண்ட நாட்களாக 6ரூபாயாக நீடித்து வந்தது. கடந்த இரு வாரங்களாக ஒரு முட்டை மொத்த விற்பனை கடையில் 6 ரூபாய் 20 பைசா என விற்கப்பட்டது. இந்நிலையில் ஒரு முட்டை 6 ரூபாய் 50 பைசாவாக உயர்ந்தது. பண்டிகை விரத சீசன்கள் முடிவுக்கு வந்த நிலையில் முட்டை நுகர்வு அதிகரித்து உள்ளதால் 30 பைசா விலை உயர்ந்தது.

error: Content is protected !!