News April 15, 2024
நெல்லை: இரவிலும் தொடரும் பிரச்சாரம்

நெல்லை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூசை ஆதரித்து 17வது வார்டுக்குட்பட்ட பழைய பேட்டை, சர்தார்புரம், காந்தி நகரில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி தலைமையில் வாரிய தலைவர் விஜிலா சத்யானந்த் மற்றும் திமுக மகளிர் அணியினர் நேற்று (ஏப்ரல் 14) இரவு வீடு வீடாகச் சென்று கைச்சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.
Similar News
News October 31, 2025
நெல்லை: 12th முடித்தால் கிராமப்புற வங்கியில் வேலை உறுதி!

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News October 31, 2025
நெல்லையில் முட்டை விலை ரூ.6.50

நெல்லை மாநகர் மற்றும் மாவட்டத்தில் மொத்த முட்டை விற்பனை கடைகளில் முட்டை விலை நீண்ட நாட்களாக 6ரூபாயாக நீடித்து வந்தது. கடந்த இரு வாரங்களாக ஒரு முட்டை மொத்த விற்பனை கடையில் 6 ரூபாய் 20 பைசா என விற்கப்பட்டது. இந்நிலையில் ஒரு முட்டை 6 ரூபாய் 50 பைசாவாக உயர்ந்தது. பண்டிகை விரத சீசன்கள் முடிவுக்கு வந்த நிலையில் முட்டை நுகர்வு அதிகரித்து உள்ளதால் 30 பைசா விலை உயர்ந்தது.
News October 31, 2025
ஊர் திரும்பிய பதக்க நாயகிக்கு உற்சாக வரவேற்பு

நெல்லை நாரணமாள்புரம் ஸ்போர்ட்ஸ் கிளப்பைச் சேர்ந்த எட்வினா என்ற வீராங்கனை பக்ரைனில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார். ஓட்டப்பந்தயம் மற்றும் மெட்லி ரிலே ஆகிய பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்ற நிலையில் ஊர் திரும்பிய எட்வினாகுக்கு தெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.


