News May 17, 2024

நெல்லை: இதுவரை 5 பேர் தீக்குளித்து தற்கொலை

image

கடந்த 2017ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் காசிதர்மத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி, 2 குழந்தைகள் உட்பட 4 பேர் கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டனர். தற்போது மருதகுளத்தைச் சேர்ந்த விவசாய சங்கரசுப்பு கடந்த திங்கட்கிழமை தீக்குளித்து இறந்தார். இது மாவட்டம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News February 9, 2026

மாநகரில் இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று பிப். 9 ஆம் தேதி திங்கள் கிழமை இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

News February 9, 2026

நெல்லை: ரூ.300 கேஸ் மானியம் பெற? இதை பண்ணுங்க!

image

நெல்லை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு <>க்ளிக்<<>> செய்து (Bharatgas, indane, HP) எந்த நிறுவனம் என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், ஐஎப்எஸ்சி கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால் மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் CREDITED குறுஞ்செய்தி வரும். இதை மற்றவர்கள் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News February 9, 2026

துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும்; வனத்துறை எச்சரிக்கை

image

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அம்பாசமுத்திரம், பாபநாசம், முண்டந்துறை, கடையம் வனச்சரக்க பகுதிகளில் வாழும் கிராம மக்கள் நாட்டு துப்பாக்கி அல்லது அனுமதி இல்லாத கள்ள துப்பாக்கிகளை வைத்திருந்தால் தாமாக முன்வந்து வரும் 20 ஆம் தேதிக்குள் வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

error: Content is protected !!