News April 1, 2025
நெல்லை ஆட்சியர் அலுவகத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அடுத்த சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 4, 2025
நெல்லையில் விரைவில் புதிய வருவாய் குறுவட்டங்கள்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று வருவாய்த்துறை சம்பந்தமான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய வருவாய் குறுவட்டங்கள் மற்றும் புதிய வருவாய் கிராமங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.
News April 4, 2025
திருநெல்வேலியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்று (ஏப்.4) திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News April 4, 2025
நெல்லையில் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனை நிர்வாகி, கணக்காளர், விற்பனை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படங்கள் உள்ளது. இதில் இளங்கலை பட்டம் பெற்ற 18 வயது முதல் 25 வயதிற்குட்பட்டவர்கள் ஏப்.30 க்குள் இங்கே <