News March 24, 2025

நெல்லை அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு

image

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் டிஇஐசி. டி- அடிக்சன் பிரிவில் 11 மாத ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற உளவியல் கவுன்சிலர், தொழில்நுட்ப அலுவலர், சோசியல் ஒர்க்கர் உள்ளிட்ட 6 பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி உள்ளவர்கள் விண்ணப்பத்தை tirunelveli.nic.in இல் பதிவு செய்து மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ஏப் 10ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

Similar News

News February 24, 2026

நெல்லை: NO EXAM.. ரூ.25,000 சம்பளத்தில் அரசு வேலை

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 608 Graduate Apprentice Trainees பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18-25 வயதுடைய B.E முடித்தவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.25,000 வழங்கப்படும். தேர்வு கிடையாது. மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE

News February 24, 2026

நெல்லை: கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

image

நெல்லை மாவட்டம், கருப்பன்துறை பகுதியில் வசிக்கும் பிரான்சிஸ் ஜவர்கலால் என்பவரது மகளுக்கு வைணவப் பெருமாள் (23) என்பவர் அலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இதனை தட்டி கேட்ட பிரான்சிஸ் ஜவர்கலால் மற்றும் அவரது மனைவியை பெருமாள் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பிரான்சிஸ் அளித்த புகாரின் பேரில் போலீசார் வைணவபெருமாளை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை.

News February 24, 2026

நெல்லையில் ட்ரோன்கள் பறக்க தடை

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று வருகை தர உள்ளார். இந்நிலையில் முதல்வரின் வருகையை முன்னிட்டு இன்று காலை 6 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை நெல்லை மாநகர காவல் எல்லைப் பகுதியில் ட்ரோன்கள் மற்றும் இதர வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!