News May 16, 2024
நெல்லை: அரசுப் பள்ளியில் சேர கடும் போட்டி

திருநெல்வேலி மாநகராட்சி கல்லணை அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டு 10, 11, 12ஆம் வகுப்பில் மாணவிகள் அதிக மதிப்பெண்களை எடுத்து அபார சாதனை படைத்துள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக இங்கு மாணவிகள் சாதனை படைப்பதால் இங்கு சேர்வதற்கு மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக 11ஆம் வகுப்பு பாடப் பிரிவுகளில் சேர கடும் போட்டி நிலவுகிறது. விஐபிகள் பரிந்துரைக்கும் அளவிற்கு கூட்டம் அலைமோதுகிறது.
Similar News
News November 28, 2025
நெல்லை அரசு அலுவலகத்தில் வேலை ரெடி

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில்; திருநெல்வேலி மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலமாக ஊரக மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட 6 வகையான பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். என்றும் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிகள் நிரப்பப்பட உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. SHARE IT.
News November 28, 2025
நெல்லை: 8 மாதத்திற்கு பின் கொலையாளி கைது

திருநெல்வேலி, முக்கூடல் பாப்பாக்குடி சேர்ந்த துப்புரவு தொழிலாளி பால்ராஜ் நாகர்கோவில் அண்ணா பஸ் ஸ்டாண்டில் தடுக்கி விழுந்து இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் பிணக்கூறாய்வு அடிப்படையில் கொலை வழக்காக பதிவு செய்யபட்டது. வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியை 8 மாதங்களுக்கு பிறகு திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த கொலையாளி சுரேஷ் (29) என்பவரை கோட்டார் போலீசார் கைது செய்தனர்.
News November 28, 2025
நெல்லை மாவட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் கவனத்திற்கு!

2025 – 26ம் ஆண்டிற்கான மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் பாளை வட்டார வள மையம் சார்பில் கிறிஸ்துராஜா மேல்நிலை பள்ளியில் 2ம் தேதி காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. முகாமில் 0 – 18 வயது வரையிலான மாற்றுத்திறன் உடைய மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மருத்துவ உதவி உபகரணங்கள் அளவீடு பஸ் பாஸ், ரயில் பாஸ் உள்ளிட்ட நலத் திட்டங்களைப் பெற இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.


