News April 29, 2025
நெல்லையில் 29 சமூக வலைதள பக்கங்கள் முடக்கம்

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே ஜாதி ரீதியாக கொலைகள் நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு மாவட்ட மற்றும் மாநகரப் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ஜாதி ரீதியாக பதிவு வெளியிட்ட 29 சமூக வலைதள கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த ஜனவரியில் இருந்து 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 29, 2025
திருநெல்வேலி சங்க தேர்தல் ரத்து

திருநெல்வேலி வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நாளை நடைபெற இருந்தது. இதில் பல்வேறு குளறுபடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதியரசர்கள் ஸ்ரீமதி, நிஷா பானு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து நாளை நடைபெற இருந்த சங்க தேர்தல் ரத்து செய்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். இதனால் வழக்கறிஞர்கள் ஏமாற்றமடைந்தனர்
News April 29, 2025
BREAKING நெல்லை டவுனில் வருமான வரித்துறை சோதனை

திருநெல்வேலி டவுன் பகுதியில் செயல்பட்டு வரும் காஜா பீடி நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மத்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமானவரித்துறையினர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு பிரிவினர் இங்கே சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் மற்றொரு பிரிவினரும் வேறு இடங்களில் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
News April 29, 2025
நெல்லை கிழக்கு மாவட்ட தலைவராக எம்எல்ஏ நியமனம்

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மர்ம மரணம் குறித்து சிபிசிஐ போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவி கடந்த சில மாதங்களாகவே காலியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் போட்டியின்றி நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.