News November 13, 2024
நெல்லையில் 2 நாள் கனமழை எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த நிலையில், தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நாளை முதல் 2 நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News November 19, 2024
பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஒருவர் கைது
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள தனியார் திரையரங்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த ரஹீம் என்பவரை இன்று கைது செய்துள்ளனர். மேலும் பத்துக்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 19, 2024
இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழக டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.19) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும்
News November 19, 2024
கைபேசியை தவிர்க்க வேண்டும் – மாநகர காவல்துறை
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ரூபேஸ் குமார் மீனா உத்தரவின்படி பொதுமக்களுக்கு தினம்தோறும் பல்வேறு குற்ற செயல்கள் குறித்தும், மோசடிகள் குறித்தும், சாலை விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று(நவ.19) வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் வாகனம் ஓட்டும் போது கைபேசியை தவிர்க்க வேண்டும் என புகைப்படத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்துள்ளனர்.