News March 27, 2025

நெல்லையில் 19 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க அனுமதி

image

நெல்லை மாவட்டத்தில் 28 புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் அதில் 189 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 9 வழித்தடங்களுக்கான ஆணைகள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 19 வழித்தடங்களுக்கு மினி பேருந்துகள் இயக்குவதற்காக கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (மார்ச்.26) அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

Similar News

News December 3, 2025

நெல்லை: ரூ.5 லட்சம், 1 பவுன் தங்கம் வேண்டுமா? ஆட்சியர்

image

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இந்த விருது பெறுபவருக்கு ரூ.5 லட்சமும், ஒரு சவரன் தங்கமும் வழங்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கு விருது பெற தகுதி உள்ள நபர்கள் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News December 3, 2025

திருநெல்வேலி இனி அல்வா மட்டும் இல்ல!

image

பாரம்பரியமிக்க பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரித்து வருகிறது. இந்த வகையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் தயாரிக்கப்படும் மரச்செப்பு பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகாரம் வழங்கி உள்ளது. குழந்தைகள் விளையாட்டு மர செப்பு பொருட்கள் இங்கு அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. இனி திருநெல்வேலினா அல்வா மட்டும் இல்ல; மேலும் ஒரு சிறப்பு இருக்கு. *ஷேர் பண்ணுங்க

News December 3, 2025

நெல்லை மக்களே.. இழந்த பணத்தை மீட்க புகார் எண்கள்!

image

நெல்லை மக்களே, டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!