News September 28, 2024
நெல்லையில் 103 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவு

நெல்லையில் நேற்று(செப்.27) 103 பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. மதியம் அனல் காற்று வீசியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வெயில் காரணமாக குளிர் பானங்கள் மற்றும் பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இளநீர், நுங்கு மற்றும் பழங்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வெயிலால் பொதுமக்கள், மாணவிகள் குடைகளுடன் செல்வதை காண முடிந்தது.
Similar News
News December 8, 2025
நெல்லை மாநகராட்சி ஆணையாளருக்கு அதிரடி உத்தரவு

நெல்லையில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் மருத்துவமனையை இடிக்க உத்தரவிட்டு 100 நாள் ஆகியும் இன்னும் இடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கில் திருநெல்வேலி மாநகராட்சியின் ஆணையாளர் மோனிகா ரானா நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஹைகோர்ட் மதுரை கிளை இன்று (டிசம்பர் 8) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
News December 8, 2025
நெல்லை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

நெல்லை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News December 8, 2025
நெல்லை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <


