News September 13, 2024
நெல்லையில் பட்டா மாற்ற உத்தரவு பெற வாய்ப்பு

நெல்லை நகர் பகுதியில் வருவாய் பின் தொடர் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை முன்னிட்டு பட்டா பெயர் மாற்றத்துக்கான விசாரணை அறிவிப்பு கடிதம் நில உரிமையாளர்களின் வீட்டிற்கு வந்து வழங்கப்படும். அவர்கள் உரிமையை நிலைநிறுத்த, விசாரணை நாளன்று சம்பந்தப்பட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பித்து பட்டா மாற்ற உத்தரவுகளை பெற்று பயனடையலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 1, 2025
நெல்லையில் வாழை இலைகள் இமாலய விலை ஏற்றம்

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் வாழைத்தார்கள் மற்றும் வாழை இலைகள் வரத்து குறைந்தது. மேலும் இன்று (டிச.1) சுபமுகூர்த்த தினம் என்பதால் ரூ.400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வாழை இலைகள், இமாலய விலை ஏற்றமடைந்து இன்று சந்தைகளில் ரூ.3500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
News December 1, 2025
நெல்லை – நவகைலாயங்களுக்கு சிறப்பு பேருந்து சேவை

மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு நெல்லை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வருகிற 21, 28 மற்றும் ஜனவரி 4, 11 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நவகைலாயங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன காலை 6.30 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு பஸ் சேவைக்கு இன்று முதல் வருகிற ஜனவரி 10ம் தேதி வரை முன்பதிவு வசதி உள்ளது. பயண கட்டணம் ஒருவருக்கு 600 ரூபாய் ஆகும். ஷேர் பண்ணுங்க.
News December 1, 2025
நெல்லை: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

நெல்லை மக்களே, உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <


