News March 25, 2025
நெல்லையில் நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரலில் தொடக்கம்

நெல்லை மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு கீழ் பாளையகோட்டை அண்ணா விளையாட்டு கக்கன் நகர் அருகே உள்ள நீச்சல் குளங்களில் நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 908088 65 63 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News September 17, 2025
நெல்லை: விஷவாயு தாக்கி ஒருவர் பலி..!

தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை கப்பலில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு தாக்கி ராஜஸ்தானை சேர்ந்த சந்திப் குமார், தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயலை சேர்ந்த ஜெனிசன் தாமஸ், நெல்லை மாவட்டம் உவரி பகுதியைச் சேர்ந்த சிரோன் ஜார்ஜ் ஆகிய 3 பேர் விஷவாயு தாக்கி மூச்சு திணறி உயிரிழந்தனர். உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News September 17, 2025
நெல்லை: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

நெல்லை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News September 17, 2025
நெல்லை – சென்னை வாராந்திர சிறப்பு ரயில் அறிவிப்பு

தசரா பண்டிகை தீபாவளி முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து செப்டம்பர் 26 மற்றும் அக்.3, 10, 17, 24 ஆகிய வெள்ளிக்கிழமைகளில் மதியம் 12:30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும். மறு மார்க்கத்தில் நெல்லை – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் செப்டம்பர் 25 அக்டோபர் 2, 9, 16, 23 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயிலுக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கியது.