News April 27, 2025
நெல்லையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 4 பேர் பலி

நெல்லை மாவட்டம் நான்குநேரியை அடுத்த தளபதிசமுத்திரம் அருகே நான்கு வழிச்சாலையில் இரண்டு கார்கள் இன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் குழந்தை உள்பட4 பேர் பலியானதாக கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு ஏர்வாடி போலீசார் விரைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
Similar News
News December 1, 2025
அம்பை: உடும்பினை வேட்டையாடி சமைத்த இருவர் கைது

அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சின்ன சங்கரன்கோவில் வாய்க்கால் பகுதிக்கு அருகே வனவிலங்கான உடும்பினை வேட்டையாடி சமைத்தது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த வனக்குற்றத்தில் ஈடுபட்ட அம்பாசமுத்திரத்தை சேர்ந்த சங்கரசுப்பு மற்றும் மேல கொட்டாரத்தை சேர்ந்த கணேசன் மகன் முத்துப்பாண்டி ஆகிய இருவர் கைது செய்து அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
News December 1, 2025
நெல்லையில் வாழை இலைகள் இமாலய விலை ஏற்றம்

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் வாழைத்தார்கள் மற்றும் வாழை இலைகள் வரத்து குறைந்தது. மேலும் இன்று (டிச.1) சுபமுகூர்த்த தினம் என்பதால் ரூ.400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வாழை இலைகள், இமாலய விலை ஏற்றமடைந்து இன்று சந்தைகளில் ரூ.3500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
News December 1, 2025
நெல்லை – நவகைலாயங்களுக்கு சிறப்பு பேருந்து சேவை

மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு நெல்லை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வருகிற 21, 28 மற்றும் ஜனவரி 4, 11 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நவகைலாயங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன காலை 6.30 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு பஸ் சேவைக்கு இன்று முதல் வருகிற ஜனவரி 10ம் தேதி வரை முன்பதிவு வசதி உள்ளது. பயண கட்டணம் ஒருவருக்கு 600 ரூபாய் ஆகும். ஷேர் பண்ணுங்க.


