News April 2, 2025
நெல்லையில் கல்குவாரி குட்டையில் மூழ்கி ஒருவர் பலி

கங்கைகொண்டான் அருகே உள்ள ராஜபதியை சேர்ந்தவர் ராமையா (55). இவர் அப்பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் தேங்கிய தண்ணீரில் நேற்று குளித்த போது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது மூழ்கி மூச்சு திணறி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 12, 2025
நயினார் நாகேந்திரனுக்கு ஜான்பாண்டியன் வாழ்த்து

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவராகத் தேர்வாகியுள்ள சகோதரர் நயினார் நாகேந்திரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற முழு வீச்சுடன் செயல்பட மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வாழ்த்து தெரிவித்தார்.
News April 12, 2025
அமைச்சரின் பேச்சுக்கு ஜான்பாண்டியன் கண்டனம்

அமைச்சர் பொன்முடியின் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான ஆபாசமான பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது. ஒரு பொறுப்புமிக்க அமைச்சராக, சமூகத்தில் பெண்களுக்கு மரியாதையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியவர், இத்தகைய அநாகரிகமான பேச்சால் சமூக மதிப்புகளை சீர்குலைக்கிறார்.
இது பெண்களின் கண்ணியத்திற்கு எதிரான செயல் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் இன்று கன்னடம் தெரிவித்துள்ளார
News April 12, 2025
இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று [ஏப்.11] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.