News May 17, 2024
நெல்லையில் கனமழை எச்சரிக்கை: தயார் நிலையில் மீட்பு படை

திருநெல்வேலி மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. அனைத்து மீட்பு உபகரணங்களுடன் பேரிடம் மீட்பு படையினர் தயார் நிலையில் இருப்பதாக மாநில பேரிடர் மீட்புப்பட்டை தகவல் தெரிவித்துள்ளது.
Similar News
News December 1, 2025
நெல்லை: கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் எல்கைக்கு உட்பட்ட சிவந்திபுரம் பகுதியில் நதியுன்னி கால்வாயில் அணைக்கட்டு பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று அம்பாசமுத்திரம் தீயணைப்பு துறையினர் மூலம் மீட்கப்பட்டு அம்பாசமுத்திரம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 1, 2025
நெல்லையப்பர் கார்த்திகை தீப விழா நிகழ்ச்சிகள் அறிவிப்பு

நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு 2ம் தேதி மாலை 6.30 மணிக்கு சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து 3ம் தேதி புதன்கிழமை இரவு 7 மணிக்கு சுவாமி சன்னதியில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்படும். முன்னதாக மாலையில் சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளல் நடைபெறும் இரவு 8 மணிக்கு அம்பாள் சன்னதியில் சொக்கப்பனை தீபம் ஏற்றப்படும்.
News December 1, 2025
நெல்லையில் இரவு ரோந்து அதிகாரிகள் நியமனம்

திருநெல்வேலி மாநகரத்தில் இரவு நேரங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி இரவு நேர ரோந்து அதிகாரிகளை நியமித்துள்ளார். அந்த வகையில் உதவி ஆணையர் அஜித்குமார் இரவு நேர ரோந்து அதிகாரியாகவும் மாநகர பகுதிகளில் உள்ள காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்களும் இரவு ரோந்து அதிகாரிகளாக நியமித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


