News January 2, 2025
நெல்லையில் இருந்து திரும்பி அனுப்பட்ட 10 ஏசி பேருந்துகள்

திருநெல்வேலி-பாபநாசம்-தென்காசி இடையில் அரசு ஏ.சி. பேருந்துகள் ஓடியது. பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லாததால் வார நாட்களில் காலியாக பயணிக்கும் நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைக்கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி மண்டலத்திலிருந்து 10 ஏசி பேருந்துகள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.
Similar News
News December 5, 2025
நெல்லை ரயிலில் 15 கிலோ கஞ்சா

சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் நோக்கிச் சென்ற விரைவு ரயில் நேற்று இரவு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது நெல்லை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் திடீர் ஆய்வு செய்தனர். அங்கு கேட்பாரற்றிருந்த 3 பைகளை கைப்பற்றினர். அதில் 15 கிலோ எடை உள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை கொண்டு வந்தவர் யார்? எங்கே கொண்டு செல்லப்பட்டது என விசாரணை.
News December 5, 2025
நெல்லை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச 5) நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News December 4, 2025
நெல்லை: இந்த சான்றிதழ்கள் உங்களிடம் இல்லையா?

நெல்லை மக்களே! உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். இங்கு<


