News January 24, 2025
நெல்லையில் இன்று மனித உரிமை ஆணையர் விசாரணை

வண்ணாரப்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் முன்னிலையில் இன்று (ஜன-24) வழக்குகள் விசாரணை நடைபெற உள்ளது. இதில் முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 9, 2025
நெல்லையில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் – 3 பேர் கைது

நெல்லை மாவட்ட காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மேல அரியகுளத்தில் சுடலையாண்டி(72), சேர்மவேல்(60), ராமசுப்பிரமணியன்(25) ஆகியோரது பட்டறையை சோதனை செய்தனர். அப்போது தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங்களான 9 அரிவாள்கள் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்தகவலை நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
நெல்லை ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை

நெல்லை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் செவிலியர், மருந்தாளுநர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட 45 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.8,500 முதல் ரூ.18,000 வரை சம்பளம். தகுதியான நபர்கள் 11.08.2025 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News August 9, 2025
ராதாபுரம் இளைஞர் கொலை – குற்றாவளிகள் வாக்குமூலம்

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சங்கநேரியை சேர்ந்த பிரபுதாஸ் கோயம்புத்தூரில் வேலை செய்த போது, எங்களது உறவினர் பெண் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்தார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். கடந்த 6ம் தேதி பிரபுதாஸை பின் தொடர்ந்தோம் தொடர்ந்து பைக்கில் சென்ற போது அவரை வழிமறித்துக் கொலை செய்தோம் என கைதானவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.