News October 25, 2024
நெல்லையில் ஆளுநர் பங்கேற்கும் விழா நேரடி ஒளிபரப்பு

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 31வது பட்டமளிப்பு விழா நாளை(26 ஆம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டம் அளிக்கிறார். இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான இணையதள முகவரியை பல்கலைக்கழகம் இன்று(அக்.,25) வெளியிட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
நெல்லையில் வாழை இலைகள் இமாலய விலை ஏற்றம்

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால் வாழைத்தார்கள் மற்றும் வாழை இலைகள் வரத்து குறைந்தது. மேலும் இன்று (டிச.1) சுபமுகூர்த்த தினம் என்பதால் ரூ.400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வாழை இலைகள், இமாலய விலை ஏற்றமடைந்து இன்று சந்தைகளில் ரூ.3500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
News December 1, 2025
நெல்லை – நவகைலாயங்களுக்கு சிறப்பு பேருந்து சேவை

மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு நெல்லை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வருகிற 21, 28 மற்றும் ஜனவரி 4, 11 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நவகைலாயங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன காலை 6.30 மணிக்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு பஸ் சேவைக்கு இன்று முதல் வருகிற ஜனவரி 10ம் தேதி வரை முன்பதிவு வசதி உள்ளது. பயண கட்டணம் ஒருவருக்கு 600 ரூபாய் ஆகும். ஷேர் பண்ணுங்க.
News December 1, 2025
நெல்லை: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

நெல்லை மக்களே, உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <


