News July 4, 2025

நெல்லையில் அவசர உதவி எண் அறிவிப்பு

image

நெல்லை சுவாமி நெல்லையப்பர் கோவில் ஆனி தேரோட்டம் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்றைய தினம் கூட்டத்தில் யாராவது தவறினால் தகவல் தெரிவிக்கவும், உதவி செய்யவும் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் 100, 0462 – 25 62 651 மற்றும் டவுன் காவல் நிலைய எண் 9498101726 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 8, 2025

நெல்லை மாநகராட்சி ஆணையாளருக்கு அதிரடி உத்தரவு

image

நெல்லையில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் மருத்துவமனையை இடிக்க உத்தரவிட்டு 100 நாள் ஆகியும் இன்னும் இடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கில் திருநெல்வேலி மாநகராட்சியின் ஆணையாளர் மோனிகா ரானா நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஹைகோர்ட் மதுரை கிளை இன்று (டிசம்பர் 8) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

News December 8, 2025

நெல்லை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

நெல்லை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE IT.

News December 8, 2025

நெல்லை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடனுதவி!

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net<<>> என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!