News January 23, 2025
நெல்லையப்பர் பத்தர தீப விழா 27 இல் தொடக்கம்

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு பத்திர தீப விழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டிற்கான இந்த விழா வருகிற 27-ஆம் தேதி இரவு தொடங்குகிறது. அன்று அம்பாள் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 28-ஆம் தேதி இரவு ஆறு மணிக்கு தங்க விளக்கு தீபம் ஏற்றப்படுகிறது. 29ஆம் தேதி மாலை மகா நந்தி தீபம் ஏற்றப்படும்.
Similar News
News December 9, 2025
நெல்லை: தாய் கொலை வழக்கில் மகனுக்கு மிரட்டல்!

சிவந்திப்பட்டி நொச்சிகுளத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (39). 2020-ல் இவரது தாய் மாரியம்மாளை சொத்து பிரச்னையால் உறவினர் மைனர்முத்து (43) கொலை செய்ததாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதில் ஆறுமுகம் முக்கிய சாட்சியாக உள்ளார். சில தினங்களுக்கு முன் ஆறுமுகம் வீட்டுக்கு வந்த மைனர்முத்து, “கோர்ட்டுக்குப் போய் சாட்சி சொல்லக்கூடாது” என அரிவாள் காட்டி கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் மைனர் முத்துவை கைது செய்தனர்.
News December 9, 2025
நெல்லை: மயங்கி விழுந்த விவசாயி பலி

நெல்லை, திருப்பணிகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வெள்ளத்துரை (50). இவருக்கு நீண்ட நாட்களாக இதய நோய் இருந்து வந்தது. நேற்று தனது வயலுக்கு சென்ற போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News December 9, 2025
நெல்லை: SBI வங்கியில் வேலை., தேர்வு இல்லை! APPLY

நெல்லை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு <


