News March 18, 2024
நெல்லைக்கு வரும் எடப்பாடி பழனிச்சாமி

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு அதிமுகவினர் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். இந்த நிலையில் வருகின்ற 26 ஆம் தேதி இரவு 7 மணிக்கு டவுன் வாகையடிமுனையில் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாட்டை நெல்லை மாநகர மாவட்ட அதிமுகவினர் செய்து வருகின்றனர்.
Similar News
News November 28, 2025
நெல்லை மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை முதல் கன மழை பெய்கிறது. இந்நிலையில் நெல்லை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்மாவட்டங்களான தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை கொடுத்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. SHARE IT.
News November 28, 2025
நெல்லை: வாடகை வீட்டில் இருக்கீங்களா? இத பாருங்க..

நெல்லை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1.அட்வான்ஸ் தொகையாக 2 மாத வாடகையை மட்டுமே கொடுக்க வேண்டும்.
2.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.
3.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.
4.மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.
இந்த தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News November 28, 2025
நெல்லை: வாக்காளர் பட்டியலில் 1.22 லட்சம் பேர் நீக்கம்?

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வரும் நிலையில், 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 946 வாக்காளர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கலெக்டர் சுகுமார் தெரிவித்தார். இதில் 69 ஆயிரம் பேர் இறந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இரட்டை பதிவு, நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள் போன்று விபரங்களும் தெரியவந்துள்ளது.


