News April 5, 2025

நெல்லைக்கு நாளை வருகை தரும் அமைச்சர்

image

தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் இன்று (ஏப்ரல் 5) காலை 10 மணியளவில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வருகை தர உள்ளார். எனவே, கட்சியினர் அனைவரும் சுற்றுலா மாளிகைக்கு வருகை தர திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News November 5, 2025

நெல்லை: தலைமை செயலகத்தில் வேலை..இன்றே கடைசி

image

தமிழ்நாடு தலைமை செயலகம் மற்றும் நிதி பிரிவில் காலியாக உள்ள உதவிப் பிரிவு அலுவலர், உதவியாளர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 32 காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். ஆர்வமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு அடுத்த மாதம் நடைபெறும்.

News November 5, 2025

நெல்லை: முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

image

களக்காடு கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த கணவரை இழந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணை கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடன் கொடுக்கல் வாங்கல் சம்பவத்தில் வழிமறித்து தவசிக்கனி என்பவர் அறிவாளால் வெட்டியுள்ளார். இது குறித்து களக்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நாங்குநேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட தவசிக்கனிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

News November 5, 2025

நெல்லை: பேராசிரியர் மீது கல்லூரி மாணவி புகார்

image

பேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் மாணவி ஒருவர் முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். அவர், தனது துறை பேராசிரியர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கல்லூரி நிர்வாகம் அவருக்கு துணை போவதாகவும் மாவட்ட ஆட்சியர் சுகுமாரிடம் நேற்று புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!