News October 23, 2024
நெற்பயிர் நீரில்மூழ்கி ரூ.3.50 கோடி இழப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, கண்ணங்குடி, திருப்புவனம், காரைக்குடி, சாக்கோட்டை, கல்லல் உள்ளிட்ட பகுதிகளில் 1,045 ஏக்கர் நிலங்களில் மழை நீர் சூழ்ந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு ரூ.3.50 கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர் சேதங்கள் குறித்து வேளாண்மை துறையினர் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.
Similar News
News December 1, 2025
சிவகங்கை பேருந்து விபத்து; பிரதமர் மோடி நிவாரணம்

பிரதமர் நரேந்திர மோடி இன்று 1.12.25 வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று 30.11.25 சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News December 1, 2025
சிவகங்கை: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <
News December 1, 2025
காரைக்குடி விபத்து: மத்திய அரசு நிவாரணம் அறிவிப்பு

காரைக்குடியிலில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் மற்றொரு அரசு பேருந்தும் நேற்று எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 நபர்கள் இறந்துள்ளதாகவும் 30மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசின் சார்பில் 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படுகிறது.


