News March 24, 2025
நெருங்கும் கோடைகாலம்: சுகாதாரத்துறை எச்சரிக்கை

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோடை காலத்தில் பரவக்கூடிய தோல், கண், செரிமான மண்டல தொந்தரவுகள், அம்மை நோய், இருமல் மற்றும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ போன்ற நோய்கள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளன. வெப்ப பக்கவாதத்தின் போது ஐஸ் கட்டிகள், தண்ணீர் உதவியோடு உடலை குளிர்வித்து சிகிச்சை அளிக்கவும். தேவை இன்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். SHARE NOW
Similar News
News November 25, 2025
புதுச்சேரி: தெரியாத நம்பர்-ல இருந்து போன் வருதா?

புதுச்சேரி மாவட்ட மக்களே, உங்களது போனுக்கு அடிக்கடி LOAN, CREDIT CARD, இடம் விற்பனை போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருதா ? கவலை வேண்டாம், மத்திய அரசின் TRAI DND 3.0 (Do Not Disturb) என்ற செயலியை <
News November 25, 2025
புதுவை: மின் இணைப்பு துண்டிக்கப்படும் – எச்சரிக்கை

புதுவை மின்துறை நகர செயற்பொறியாளர் நேற்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், புதுவை மின்துறை நகர இயக்குதல் பராமரித்தல் கோட்டம், நகர்ப்புற மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உட்பட்ட கடற்கரை சாலை, வம்பாகீரைப்பாளையம், திப்புராய்பேட், நெல்லித்தோப்பு, சாரம், பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் தங்கள்மின் கட்டணத் தொகையை கடைசி தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு தெரிவித்துள்ளார்.
News November 25, 2025
புதுச்சேரி: மீனவர்களுக்கு எச்சரிக்கை

புதுவை மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் நேற்று(நவ.24) செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி இன்று 25ந்தேதி முதல் கடலோரப்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.


