News April 8, 2025
நெசவாளர் திட்டங்களில் சுணக்கம்: அரசு அலட்சியம்

காஞ்சிபுரத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கான திட்டங்கள் செயல்படுத்துவதில் சுணுக்கம் ஏற்படுகிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப நெசவாளர்களின் கூலி உயர்வு இல்லை. தனியார் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலி விவகாரத்தில், வரையறை இல்லை. மழைக்காலத்தில் நெசவாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் பெறும் திட்டத்தில் அலைக்கழிப்பு, கழிவுத்தொகை, 200 ரூபாயாகவே பல ஆண்டுகளாக தொடர்கிறது.
Similar News
News July 7, 2025
சங்கராச்சாரிய சுவாமிகளுடன் அமைச்சர்

குன்றத்தூர் நகைமுகவல்லி உடனுறை கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில், நாளை (ஜூலை 7) குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, யாகசாலை முதற்கால பூஜை நிகழ்ச்சி இன்று (ஜூலை 6) நடைபெற்றது. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜேந்திரர் சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். அவருடன், அமைச்சரும் – காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பரசன் பங்கேற்றார்.
News July 6, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 6, 2025
சிறப்பு வாய்ந்த கோயில்கள்

காஞ்சிபுரத்தில் உள்ள 10 முக்கிய கோயில்கள். 1. ஏகாம்பரநாதர் கோயில், 2. காஞ்சி கைலாசநாதர் கோயில், 3. காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில், 4. வரதராஜ பெருமாள் கோயில், 5. ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில், 6. ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில், 7. ஸ்ரீ முக்தீஸ்வரர் கோயில், 8. ஐராவதனேஸ்வரர் கோயில், 9. சித்திரகுப்தர் கோயில், 10. த்ரிலோக்யநாதர் கோயில்.நம்ப ஊரில் உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.