News September 27, 2024
நெகிழ்ச்சியான நகரத்தை உருவாக்குக்கும் மாநகராட்சி

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையின் அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டு வருகிறது. மேலும் “அடைப்பு அல்லது பிற சிக்கல்களைப் புகாரளித்து, கனமழையை திறம்பட நிர்வகிப்பதற்கும், மேலும் நெகிழ்ச்சியான நகரத்தை உருவாக்குவதற்கும் எங்களுக்கு உதவுவதன் மூலம் உங்களை ஈடுபடுத்த ஊக்குவிக்கிறோம்” என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
மெரினா கடற்கரையில் இன்று கலாச்சார கலைவிழா

சென்னை, மெரினா கடற்கரையின் நீலக் கொடி பகுதியில் இன்று மாலை 5:30 மணிக்கு கலாச்சார கலைவிழா நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் நம் பாரம்பரியத்தை கொண்டாடும் இந்த நிகழ்வில் பெரிய மேளம், சேவையாட்டம், நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட கலைகள் இடம்பெறுகின்றன. பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழர் மரபை அனுபவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
ரு.2,036 கோடியில் 28 புதிய ரயில்கள் வாங்க டெண்டர்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), முதற்கட்ட வழித்தட திட்டத்திற்காக தோராயமாக ரூ.2,036 கோடி மதிப்பில் 28 புதிய ரயில்கள் வாங்க டெண்டர் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலும் 6 பெட்டிகளைக் கொண்டிருக்கும். இந்தப் புதிய ரயில்கள் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும். இது சென்னையின் விரிவடையும் மெட்ரோ சேவைக்கு உறுதுணையாக இருக்கும்.
News November 23, 2025
சென்னை மக்களே மாடி தோட்டம் அமைக்க ஆசையா?

சென்னை மக்களே… உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா? தமிழ்நாடு அரசின் மாடித்தோட்ட திட்டம் உங்களின் ஆசையை நிறைவேற்றும். இங்கு <


