News March 17, 2025

நூற்றாண்டு கடந்த பாம்பன் கலங்கரை விளக்கம்

image

பாம்பனில் 1846ம் ஆண்டு ஐரோப்பியர்களால் 100 அடி உயர நேவல் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை சம்பவத்திற்கு பிறகு கலங்கரை விளக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 33 ஆண்டுகளுக்கு பின் கடந்தாண்டு மீண்டும் பொதுபயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. ரூ.10 கட்டணத்தில் பூங்காவுடன் இயங்கும் நேவல் கலங்கரை விளக்கம் குழந்தைகளுடன் பொழுதினை கழிக்க ஏற்ற இடமாக அமையும். *ஷேர் பண்ணுங்க

Similar News

News March 18, 2025

விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்ப பிரார்த்தனை

image

விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், புஜ் வில்மோர் ஆகிய இருவரும் பூமிக்கு திரும்புவதில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல்வேறு தடைகள் ஏற்பட்டனஇந்நிலையில் இருவரும் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிட பிரார்த்தனை செய்து ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் கிராம மக்கள் வேண்டுதலுடன் கூடிய பிளக்ஸ் போர்டுகள் வைத்து வரவேற்கின்றனர். இப்படி ஒரு பிளக்ஸ் போர்டு நீங்கள் பார்த்ததுண்டா? இதை அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 18, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் ரோந்து காவல் அதிகாரிகள்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (18.03.2025) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் மற்றும் உதவி எண் 100 ஐ டயல் செய்யலாம். என்ற தகவல் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2025

ராமேஸ்வரம் கோவிலில் பக்தர் உயிரிழப்பு

image

ராமேஸ்வரம் கோயில் சுவாமி சன்னதியில் ரூ.50 கட்டண தரிசன டிக்கெட் பெற்று ஸ்படிகலிங்க தரிசனத்திற்காக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ்தாஸ் (59) என்பவர் நீண்ட நேரம் காத்திருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கமுற்று தரையில் சாய்ந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!