News January 24, 2025
நூதன பேனர் வைத்த பொதுமக்கள்

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனையும் தாண்டி குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் குப்பை கொட்டுவது வழக்கமாகி வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில் திருப்பூர் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ‘குப்பை கொட்ட கூடாது மீறினால் புகைப்படம் எடுத்து மீடியாவில் வெளியிடப்படும்’ என பேனர் வைக்கப்பட்டுள்ளது
Similar News
News September 18, 2025
திருப்பூரில் மனைவியை கொன்ற கணவன் கைது

மேற்குவங்கத்தை சேர்ந்தவர் கவுரங்கா மண்டேல் (45), இவரது மனைவி ரிங்கு மண்டேல் (35). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காங்கேயத்திற்கு கணவன் மனைவி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றிரவு அறையில் தூங்கி கொண்டிருந்த போது மனைவியை கவுரங்கா மண்டேல் கொலை செய்தார். பின் போலீசார் திருப்பூர் ரயில் நிலையத்தில் வைத்து கவுரங்கா மண்டேலை கைது செய்தனர்.
News September 18, 2025
திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (செப்.18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஓடக்காடு, பங்களா ஸ்டாப், ஸ்டேசன் வீதி, வளையங்காடு, முருங்கப்பாளையம், மாஸ்கோநகர், காமாட்சிபுரம், சாமுண்டிபுரம், கல்லம்பாளையம், பத்மாவதிபுரம், அண்ணாகாலனி, அங்கேரிபாளையம் ரோடு, கஞ்சம்பாளையம், சின்ன பொம்மநாயக்கன்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News September 18, 2025
திருப்பூர்: தலைமறைவு குற்றவாளி கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு டாக்டர் நகர் பகுதியில் கார் திருடப்பட்ட வழக்கில் கடந்த ஏழு ஆண்டுகளாக தலை மறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் இன்று கைது செய்தனர். தர்மபுரி பகுதியைச் சேர்ந்த ராமன் என்ற சப்பாத்தி ராமன் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி சிறையில் அடைத்தனர்.