News August 8, 2024
நீலகிரி: 2 மாதத்தில் 3 யானைகள் பலி

கூடலூர்: தொரப்பள்ளி தேன்வயல் பகுதியில் கடந்த ஜூலை 7ஆம் தேதி யானை ஒன்று சேற்றில் சிக்கி உயிரிழந்தது. பின்னர், 30ஆம் தேதி மச்சிகொல்லி பகுதியில் மரம் சரிந்து மின் கம்பியில் சிக்கி இன்னொரு யானை இறந்தது. தற்போது ஸ்ரீமதுரை வடவயல் பகுதியில் மின் கம்பியால், மற்றொரு யானை பலியானது. இப்படி கடந்த 2 மாதத்தில் 3 யானைகள் பலியான சம்பவம் விலங்கு ஆர்வலர்களை வருத்தமடைய செய்துள்ளது.
Similar News
News October 17, 2025
நீலகிரி: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா, தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலாமேரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளை முன்வைத்து தீர்வு கோரினர்.
News October 17, 2025
நீலகிரி: நாளை கடைசி நாள்! மிஸ் பண்ணிடாதீங்க!

நீலகிரி மக்களே.., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்(TNSTC) காலியாக உள்ள அப்பரண்டீஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1588 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News October 17, 2025
தேவர்சோலை: சாலையோரம் பதுங்கி நின்ற யானை!

தேவர் சோலை பேரூராட்சி மூன்றாவது மைல், மஞ்சமுலா, பாடந்துறை பகுதிகளில் பல மாதங்களாக யானை ஒன்று சுற்றி வருகிறது. மேலும் நேற்றைய தினம் இரவு மூன்றாவது மைல் பகுதியில் பிரதான சாலை அருகே இந்த ஒற்றை யானை சாலையோரம் உள்ள புதர்களுக்கிடையே மறைந்து இருந்த நிலையில் காணப்பட்டதை கண்ட சாலையில் பயணித்த வாகன ஓட்டுநர்கள் அனைவரும் அச்சம் அடைந்தனர். மேலும் இந்த யானையை கண்காணிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.