News April 28, 2025
நீலகிரி லஞ்ச ஒழிப்புத் துறை தொலைபேசி எண்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், உள்ளாட்சித் துறை மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் தங்களது அரசுப் பணியை மேற்கொள்ள லஞ்சமாக பணம் கேட்டால் 0423-2443962 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அல்லது dspvacooty@gmail.com, dspnigdvac.tnpol@nic.in என்ற மின்னஞ்சல்களிலும் மக்கள் புகார்களை அளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 26, 2025
நீலகிரி: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
News November 26, 2025
நீலகிரி: வாட்ஸ் ஆப் இருக்கா? சூப்பர் தகவல்

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News November 26, 2025
கூடலூரில் காட்டு யானை! பயத்தில் மக்கள்

நீலகிரி, கூடலூர் நகருக்குள் வரும் நடுகூடலூர் பகுதியில், குடியிருப்புகளுக்கு மிக அருகில் நேற்று பகல் நேரத்தில் ஒரு காட்டு யானை முகாமிட்டிருப்பது பொதுமக்களில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பகல் நேரத்திலேயே யானை குடியிருப்பு பகுதிக்கு உலா வந்தது. அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


