News November 23, 2024
நீலகிரி: ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை

குன்னுார் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பாதுகாப்பு நடைமுறைகள், போக்குவரத்து மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து விவாதங்கள் நடந்தன. ராணுவ கல்லூரியில் ராணுவ உயர் அதிகாரிகளுடன், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா, கூடுதல் கலெக்டர் சங்கீதா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
Similar News
News December 22, 2025
அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட,சீர் மரபினை பிரிவினை சார்ந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தங்களது UMIS login பயன்படுத்தி www.cims.tn.gov.in என்ற இணையத்தள பக்கத்தில் 2025-26 ஆண்டுக்கான கல்வி உதவித்
தொகைக்கு (31/12/25)-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவித்துள்ளார்.
News December 22, 2025
கூடலூர் அருகே வாகன விபத்து

கூடலூர் கள்ளிக்கோட்டை சாலையில் இன்று இரவு 8 மணி அளவில் கேரளா பதிவு எண் கொண்ட காய்கறி ஏற்றி சென்ற பிக்கப் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி சாலையில் நடுவே இடப்பட்டுள்ள தடுப்பு சுவரில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. இதில் வாகனம் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது இந்த விபத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி செய்கின்றனர்.